மாநகரம், கைதி,மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்து வருகிறது.
இவ்வாறு இருக்கையில் கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' படம் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பையும், பெரிய வெற்றியையும் பெற்றுள்ளது. ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க கமல்ஹாசன் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தான் ஒரு படம் முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் நடக்கவில்லை. அதன் பின்னர் தான் கமல்ஹாசனே கதாநாயகனாக நடிக்க லோகேஷ் இயக்க 'விக்ரம்' படத்தை ஆரம்பித்தனர்.
முன்னர் முடிவு செய்யப்பட்டு கைவிடப்பட்ட ரஜினிகாந்த் - கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படம் மீண்டும் ஆரம்பிக்கப்படலாமென ஒரு தகவல் கசிந்து வருகின்றது.சமீபத்தில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினர். அதன்பின் 'விக்ரம்' படத்தை வெகுவாகப் பாராட்டினார் ரஜினி என்ற செய்திகளும் வெளிவந்தன.
அத்தோடு ரஜினிகாந்த் - லோகேஷ் இணைந்து ஒரு படம் செய்ய மாட்டார்களா என்று ரஜினிகாந்த் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். இவ்வாறு இருக்கையில் அது நடக்கும் என்றே தெரிகிறது. விஜய் நடிக்கும் படத்தை இயக்கி முடித்த பின் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்குவார் எனத் தெரிகிறது. அதன் பிறகுதான் 'கைதி 2' படத்தை இயக்குவார் என்றும் சொல்கிறார்கள்.
நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படத்தை ரஜினிகாந்த் முடித்த பின் அவரது 170வது படமாக லோகேஷ் இயக்கும் படம் உருவாகலாம். எனினும் அதற்குள் விஜய்யின் 67வது படத்தை லோகேஷும் இயக்கி முடித்துவிட்டு வந்துவிடுவாராம்.
பிற செய்திகள்:
- கோபி பிரச்சனைக்கு அம்மா சொன்ன தீர்வு..குழப்பத்தில் ராதிகா – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- இலங்கைத் தமிழரை திருமணம் செய்த ரம்பாவின் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!
- முதல் முறையாக பாலிவுட் நடிகருடன் இணைந்து சமந்தா வெளியிட்ட புகைப்படம்-இது தான் விசயமா..?
- சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேர்ந்த கயல் சீரியல் சைத்ரா ரெட்டி- அவரே பதிவிட்ட வீடியோ..!
- திடீரென தனது சம்பளத்தை அதிகரித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்..!
- சார்ப்பாட்டா பட நாயகியியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகர்-அட இவரா..!
- நம்ம சரத்குமாருக்கு இப்பிடி ஒரு நிலையா…தளபதி 66 குறித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
- நடிகை எமி ஜாக்சனின் புதிய காதலன் வெளியிட்ட புகைப்படம்..!
- “உங்கள போலீஸ் Arrest பண்ணனும்..” பயில்வானை திட்டித்தீர்த்த சுசித்ரா-பரபரப்புடன் லீக்கான ஆடியோ..!
- இலங்கைத் தமிழரை திருமணம் செய்த ரம்பாவின் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!