• Jan 18 2025

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் மதிய நேரத்திற்கு மாற்றப்படுகிறதா? ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியல் தற்போது பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

 தற்போது சரவணன் - தங்கமயில் நிச்சயதார்த்தம் குறித்த காட்சிகள் நடைபெற்று வரும் நிலையில் திருமணத்திற்குள் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அடுத்தடுத்த எபிசோடுகளுக்கு நல்ல எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மதிய நேரத்திற்கு மாற்றப்பட உள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பிரைம் டைம் மற்றும் மதிய நேரம் ஆகிய இரண்டிலும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் ஒளிபரப்பாகும் என்றும் பிரைம் டைமில் ஒளிபரப்பாவதை நிறுத்திவிட்டு மதிய நேரத்தில் ஒளிபரப்பாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ’தமிழன் சரஸ்வதியும்’ மற்றும் ’கிழக்கு வாசல்’ ஆகிய இரண்டு சீரியல்கள் ஒரே நேரத்தில் முடிவடைந்த நிலையில் மதியம் ஒரு மணிக்கு ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் ஒளிபரப்பாகும் என்றும் அதன் பிறகு மீண்டும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது. புதிய சீரியல் தொடங்கும் வரை ஒரே நாளில் 2 முறை இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்றும், அதன் பின்னர் மீண்டும் ப்ரைம் டைமில் மட்டும் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் விஜய் டிவி தரப்பில் இருந்து இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement