• Jan 19 2025

முடிக்கவே முடியாது என சொன்னதை முடித்து காட்டிய இயக்குநர் பாலா.. தரமான சம்பவங்களின் புகைப்படங்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ’வணங்கான்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் திடீரென பாலா மற்றும் சூர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த படம் ட்ராப் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சூர்யா விலகிவிட்டாலும் இந்த படத்தை வேறொரு நடிகரை வைத்து முடித்து காட்டுவேன் என்று சவால் விட்ட பாலா, அருண் விஜய்யை கமிட் செய்து இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து வந்தார்.

சூர்யாவே இந்த படத்தில் நடிக்க முடியாத நிலையில் அருண் விஜய் எப்படி நடிப்பார்? இவரும் இடையிலேயே வெளியே வந்து விடுவார் என்று தான் கோலிவுட் திரையுலகினரால் கூறப்பட்டது. மேலும் பாலா தற்போதைய டிரெண்டில் இல்லை என்றும் அதனால் அவரால் இந்த படத்தை முடிக்க முடியாது என்றும் சிலர் அவர் காதுபடவே கூறியதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ’வணங்கான்’ படத்தை முடிக்கவே முடியாது என்று அனைவரும் கூறினாலும் தன்னால் இந்த படத்தை முடிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் பணிகளை தொடங்கிய பாலா, அருண் விஜய்யை வைத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தினார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த உடன் படக்குழுவினர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நடிகர் அருண் விஜய், ‘பாலா அவர்கள் கொடுத்த அசத்தலான கேரக்டரில் நடிப்பது சவாலான காரியம் என்றாலும் அதை நடித்து முடித்துள்ளேன் என்றும், இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு எனது நன்றி என்றும் குறிப்பாக மிஷ்கின், சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றும் அருண் விஜய் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement