• Jan 19 2025

விஜய் கட்டிய சாய்பாபா கோவிலில் ராகவா லாரன்ஸ்.. யாருடைய காலில் விழுந்தார் தெரியுமா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் சமீபத்தில் சாய்பாபா கோவில் கட்டியதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த கோவிலுக்கு நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் வருகை தந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சென்னை கொரட்டூரில் சாய்பாபா கோவிலை நடிகர் விஜய் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய நிலையில் இந்த கோவிலுக்கு தற்போது ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய அம்மா ஷோபா சந்திரசேகர் தீவிர சாய்பாபா பக்தர் என்பதால் நடிகர் விஜய் இந்த கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. தாயாருக்காக கட்டிய இந்த கோவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் பயன்படுவதில் விஜய்க்கு மிகுந்த மகிழ்ச்சி என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இந்த கோயிலுக்கு தற்போது நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் வருகை தந்துள்ளார். அவரை ஷோபா சந்திரசேகர் வரவேற்ற நிலையில் அவருடைய காலில் விழுந்து ராகவா லாரன்ஸ் ஆசி பெற்றுக்கொண்டார். நான் முதன்முதலில் ராகவேந்திரா ஸ்வாமி கட்டிய போது அந்த கோயிலுக்கு ஷோபா சந்திரசேகர் வந்து பாடல் பாடினார் என்பதும் இப்போது ஷோபா சந்திரசேகர் மகன் விஜய் அவர்கள் கட்டிய கோவிலுக்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் ராகவா லாரன்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கோவிலில் ராகவா லாரன்ஸ் சாய்பாபாவை தரிசனம் செய்தது, ஷோபா சந்திரசேகர் உடன் இணைந்து புகைப்படம் எடுத்து உள்ளிட்ட காட்சிகள் உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement