• Jan 19 2025

வெங்கடேஷ் பட் புதிய நிகழ்ச்சிக்கு செல்கிறாரா குரேஷி? குக் வித் கோமாளி புரமோவில் எல்லாம் வந்தாரே?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் கோமாளியாக குரேஷி வருவது உறுதி செய்யப்பட்டது என்பதும், ப்ரோமோவில் கூட அவர் வந்திருந்தார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் திடீரென வெங்கடேஷ் பட் தொகுத்து வழங்கும் புதிய சமையல் நிகழ்ச்சிக்கு குரேஷி செல்ல இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிகளில் இருந்து வெங்கடேஷ் பட் திடீரென விலகினார் என்பதும் அதன் பிறகு சிலர் விலகினார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தாமுடன் புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் மிகவும் பிரமாண்டமாக ஐந்தாவது சீசனை நடத்த விஜய் டிவி திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக்குக்கள் மற்றும் கோமாளிகள் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் குரேஷி இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று சமீபத்தில் வெங்கடேஷ் பட் தனது சமூக வலைதளத்தில் தன்னுடைய புதிய நிகழ்ச்சி குறித்த அப்டேட்டை வெளியிட்டிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு தனது வாழ்த்து தெரிவிக்கும் வகையில் குரேஷி கமெண்ட் செய்திருந்தார். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக ஒரு நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் நடத்தும் நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு எப்படி குரேஷி கமெண்ட் செய்யலாம் என்று நெட்டிசன்கள் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். மேலும் அது மட்டுமின்றி வெங்கடேஷ் பட் புதிய நிகழ்ச்சிக்கு குரேஷி செல்லப் போகிறாரா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள குரேஷி ’நான் சாதாரணமாகத்தான் ஒரு கமெண்ட் போட்டேன், வெங்கடேஷ் பட் சார் எனக்கு நல்ல பழக்கம், அதனால் அவருடைய புதிய முயற்சிக்கு வாழ்த்து சொன்னேன், இது தப்பா? சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் என்ன எழுதுவது என்று தெரியாமல் எழுதுகிறார்கள், என்னை பொருத்தவரை நான் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் இருக்கிறேன் அதை மட்டும் உறுதியாக சொல்ல விரும்புகிறேன்’ என்று கூறினார்.

Advertisement

Advertisement