• Sep 27 2023

'சின்ன சின்ன வண்ண குயில்'...சாங்-க்கு கியூட் ரியாக்ஷன் கொடுத்த சுந்தரி..! Viral Video!

Jo / 4 weeks ago

Advertisement

Listen News!

மைம் கலைஞரான கேப்ரியல்லா செல்லஸ் சினிமாவில் நடிப்பதற்காக பல ஆண்டுகள் முயற்சி செய்து வந்த நிலையில், கடைசியாக நயன்தாராவின் ஐரா படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் லீடு ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்த சீரியல் மூலம் இவருக்கென உருவான ரசிகர் கூட்டம் ஏராளம் என்றே சொல்லலாம் .அந்தளவிற்கு இவரது நடிப்பு பிரமிக்கக்கூடியது.


அந்த வாய்ப்பை சரியாக பிடித்துக் கொண்டு தனது நடிப்பால் கெத்துக் காட்டி வருகிறார் கேப்ரியல்லா செல்லஸ். இன்ஸ்டாகிராமில் தனது  போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.


அந்தவகையில் சின்ன சின்ன வண்ண குயில் பாடலுக்கு கியூட் ரியாக்ஷன் கொடுத்து ரீல்ஸ் பண்ணி வெளியிட்டிருந்தார். 


Advertisement

Advertisement

Advertisement