சிறிய பட்ஜெட்டில் உருவாகி, புதுமுகங்களை கொண்டிருக்கும் "லிட்டில் ஹார்ட்ஸ்" திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வெற்றியைத் தேடி வருகிறது. மௌலி தனுஜ் பிரஷாந்த் மற்றும் சிவானி நாகரம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம், தனது முதல் நாளிலேயே ரூ.2 கோடி வசூலித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு, ஷோக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று படக்குழு எடுத்துள்ள புரொமோஷன்கள். யூனிக் மார்க்கெட்டிங், வைரலான மேக்கிங் வீடியோக்கள், நகைச்சுவை ரோஸ்ட் நிகழ்ச்சிகள் என பல்வேறு முயற்சிகள் மூலம் படத்திற்கு சமூக ஊடகங்களில் பரவலான கவனம் கிடைத்துள்ளது.
அதோடு, நகைச்சுவைமிக்க காட்சிகள் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 'ரிலேட்டபிள்' கன்டெண்ட் என்பதால், இளம் பார்வையாளர்கள் படம் தொடர்பாக தீவிரமாகப் பேசிக் கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!