• Oct 22 2024

தரமான சாதனையை படைத்த லியோ ட்ரெய்லர்! கொண்டாடித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் லியோ. இந்தத் திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும் சில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர் நேற்றைய தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.


ட்ரெய்லருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். காஷ்மீரில் சீரியல் கில்லர் கதையை விஜய் சொல்லும்படி தொடங்கும் ட்ரெய்லர் கடைசியில் லியோ எண்ட்ரியுடன் முடிவடைகிறது.


இப்படத்தில் கெட்ட வார்த்தை பேசியிருப்பதும் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதனால் விஜய் பெண்களை இப்படி இழிவாக சொல்லலாமா என்று பலரும் தமது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு லோகேஷ் கனகராஜ் எல்லாம் தகுதியே இல்லாத இயக்குநர் என்று காட்டமாக ஒருசிலர் விமர்சிக்கவும் செய்தனர். ஏற்கனவே நா ரெடிதான் பாடல் சர்ச்சையை சந்தித்த சூழலில் தற்போது ட்ரெய்லரும் சந்தித்திருக்கிறது. இந்த சூழலில் லியோ ட்ரெய்லர் தரமான சாதனையை படைத்துள்ளது. லியோ ட்ரெய்லர் வெளியாகி இரு நாட்களுக்குள்  3.7 மில்லியன் லைக்குகளையும், 47 மில்லியன் பார்வைகளைகளையும் யூடியூபில் கடந்திருக்கிறது.

Advertisement