• Jan 15 2025

பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி எபிசோட்டா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் பல எபிசோட்டுகளை கடந்தும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீரியலில் ராதிகாவின் கர்ப்பம் கலைந்து, அதற்கு காரணம் ஈஸ்வரி தான் என போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து சிறிது காலம் விறுவிறுப்பாக சென்றது. அதற்கு பிறகு ஈஸ்வரி உண்மையான நிரூபராதி என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இனியா போலிஸ் சர்ச்சையில் சிக்கினார். அவரை ராதிகா காப்பாற்றி நான் உங்களைப் போல இல்லை என பாக்கியாவுக்கு பதிலடி கொடுத்திருந்தார். 


இன்னொரு பக்கம் கோபி செய்த காரியத்தால் ஈஸ்வரி அவரை தலைமுழுகியதோடு ராமமூர்த்தியும் அவன் என் பிள்ளை இல்லை எனக்கு கொல்லி கூட வைக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளார்கள்.

தற்போது இந்த சீரியலில் ராதிகாவால் தான் தனது மொத்த குடும்பமும் தன்னை பிரிந்து போனது என கோபி சொல்ல, அப்படி என்றால் தன்னை விவாகரத்து செய்து மீண்டும் அவர்களுடனே போய் சேருமாறு ராதிகா கூறுகின்றார். இதனால் கோபி எடுக்க போகும் முடிவு என்ன என்று இனிவரும் காலங்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் பல மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பான ஸ்ரீ மோயி தொடர் 5 மொழிகளில் முடிவுக்கு வந்துள்ளது. சமீபத்தில் குடும்ப விளக்கு என்ற பெயரில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தொடர் கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி முடிவுக்கு வந்துள்ளது.

தற்போது மராத்தி, ஹிந்தி மற்றும் தமிழில் தான் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement