சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , அருணின் முகத்திரையை சீதா முன்னிலையில் கிழிக்கின்றார் முத்து. இதனால் உண்மையை அறிந்த சீதா அருண் மீது கோபப்பட்டு செல்லுகின்றார். மேலும் அருணால் தான் மீனாவுடன் சண்டை போட்டதை நினைத்து வருந்துகின்றார்.
இன்னொரு பக்கம் க்ரிஷ் படிக்கும் ஸ்கூலில் அங்கிருந்த மாணவன் ஒருவன் க்ரிஷிடம் அவருடைய அம்மாவை பற்றி பேசி தகராறு பண்ணுகின்றார். இதனால் கோபத்தில் க்ரிஷ் அவன் மீது பென்சிலால் குத்தி தள்ளி விடுகின்றார், பிறகு பாடசாலை ஆசிரியர் க்ரிஷை அழைத்து முழங்காலில் வைத்து போலீசில் பிடித்துக் கொடுப்பதாக மிரட்டுகின்றார்.
அந்த நேரத்தில் மீனா அந்த ஸ்கூலுக்கு பூ ஆர்டர் எடுப்பதற்காக செல்கின்றார். ஆனாலும் இவர் க்ரிஷை கவனிக்கவில்லை. மீனா சென்றதும் க்ரிஷும் கீழே இறங்கி வருகின்றார். எனினும் இருவரும் ஒருவருக்கொருவர் மீட் பண்ண வில்லை.
மறுபக்கம் சீதா வீட்டில் வந்து ஒரு மாதிரி இருக்க, அருணின் அம்மா என்ன நடந்தது என்று கேட்கின்றார். ஆனால் அவர் எதுவும் சொல்லாமல் ரூமுக்கு சென்று விடுகின்றார். அதன் பின்பு ரூமுக்குச் சென்ற அருண் சீதாவின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றார்.
மேலும் உன்னுடைய அக்காவும் மாமாவும் உன் மீது ரொம்ப பாசமா இருக்காங்க.. அது எனக்கு பிடிக்கல.. உன்னுடைய மொத்த பாசமும் எனக்கு வேண்டும். இனி இப்படி செய்ய மாட்டேன் என்று சொல்லுகின்றார். ஆனாலும் மனதுக்குள் அடுத்த முறை உன்னை விடவே மாட்டேன் என்று முத்து மீது மீண்டும் வன்மத்தை கக்குகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!