விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய கதைகளத்துடன் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை விரிவாக பார்ப்போம்.
அதன்படி ஒரு மாதிரியாக க்ரிசை வீட்டிற்குள் கொண்டு வந்த ரோகிணி, மனோஜ் அவருடன் நெருங்கி பழக வைக்கிறார். ஒரு கட்டத்தில் அவரை டாடி என்று அழைக்குமாறு சொல்ல, அண்ணாமலை அது பற்றி விசாரிக்கின்றார்.
இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் க்ரிஷை பிஏ அழைத்துச் செல்கின்றார். அதற்கு பின்பு ரோகினிக்கு கால் பண்ணி எனக்கு இரண்டு லட்சம் ரூபாய் வேண்டும் அது மட்டும் க்ரிஷை விட மாட்டேன் என்று மிரட்டுகின்றார்.

இது அறிந்த விஜயாவும் மனோஜூம் அவன் போனது நல்ல விடயம் தான் அப்படியே விட்டுவிடுங்கள் என்று பேசிக்கொள்ளுகின்றார்கள். எனினும் ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் மிரண்டு போய் உள்ளார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
எனவே ஏற்கனவே ரோகிணியுடைய விஷயத்தில் மீனா தன்னுடைய ஆதரவை விருப்பமின்றி தெரிவித்து வரும் நிலையில், இந்த விடயமும் மீனாவுக்கு தெரிந்து அவர் சப்போர்ட் பண்ணுவாரா? இல்லை ரோகிணி எப்படிப்பட்ட முடிவை எடுக்க போகின்றார் என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்ப்போம்.
Listen News!