• Jan 18 2025

பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேறவுள்ள மற்றுமொரு போட்டியாளர் யார் தெரியுமா?- இது என்ன புது டுவிஸ்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இது பினாலே வாரம் என்பதால் இதுவரை எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்து வருகின்றனர்.

 அந்த வகையில் நேற்று வரை அக்‌ஷயா, அனன்ய, வினுஷா, பிராவோ, கூல் சுரேஷ், சரவண விக்ரம் ஆகிய ஆறு பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மேலும் மூன்று போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். முதலில் ஜோவிகா செல்ல, அடுத்ததாக கானா பாலா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். இதையடுத்து மூன்றாவது போட்டியாளராக பீனிக்ஸ் பூர்ணிமா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.


விஷ்ணு ஏற்கெனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார்.வீட்டில் 5 பேர் இருப்பதால் வெற்றியாளர் யார் என்பதை ரசிகர்கள் பேசி வர அதிலும் பிக்பாஸ் ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளார்.

அதாவது விஜய் வர்மாவை தொடர்ந்து இன்னொரு மிட்வீக் எவிக்ஷன் உள்ளதாம். விஷ்ணு இறுதி போட்டிக்கு தேர்வாகி விட்டார், அடுத்து அர்ச்சனா மற்றும் மாயாவிற்கு அதிக வாக்குகள் பதிவாகி வருகிறதாம்.மீதம் தினேஷ் மற்றும் மணி தான் உள்ளனர், இவர்களில் ஒருவர் தான் வெளியேறுவார் என கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement