• Jan 19 2025

இது தான் என்னுடைய கடைசிப் போட்டோ, ரெடின் கிங்ஸ்லி இல்லாமல் சங்கீதா வெளியிட்ட புகைப்படம்- என்னாச்சு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சில தினங்களுக்கு முன்பு சீரியல் நடிகை சங்கீதாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லியின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆன நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.


அண்மையில் ரெடின் கிங்ஸ்லி மனைவி உடன் ஹனிமூன் சென்றிருக்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தன. மேலும் தனக்கு வாழ்த்து கூறிய எல்லோருக்கும் நன்றியும் கூறியிருந்தார்.


மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் சங்கீதாவும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது சங்கீதா தன்னந்தனியாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.


இதற்கு கேப்ஷனாக மணமகளாக தயாராகி, அழகான இதயம் உள்ளவருக்கு மனைவியாக மாறுவதற்கு முன், இது கடைசி படம் என பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து லைக்குகள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement