• Apr 28 2024

நைட் பார்ட்டியில் மனைவிக்கு ஸ்வீட் முத்தம் கொடுத்த கே.எல்.ராகுல்! வைரலாகும் வீடியோ

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி, பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலை கடந்த ஜனவரி 23 அன்று திருமணம் செய்துகொண்டார். நடிகை அதியா, தனது தந்தை சுனில் ஷெட்டியின் கண்டாலா பண்ணை வீட்டில் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வைத்து இந்த திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், ஜனவரி 30 அன்று, இந்த ஜோடி மும்பையில் முதல் முறையாக ஒன்றாக வருகை தந்திருந்தன. 

மேலும், அவர்கள் ஒரு இரவு உணவிற்கு மும்பை நகரத்திற்கு வெளியே வந்த நிலையில், சினிமா ட்ராக்கர்களின் கேமராவுக்கு மகிழ்ச்சியுடன் ஜோடியாக  போஸ் கொடுத்தனர்.


நேற்றைய தினம் ஒரு இரவு பார்ட்டி ஒன்று நடந்துள்ளது. அந்த பார்ட்டி முடித்த பின்பு, அவர்களின் குறும்புகள் மற்றும் அழகான தருணங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. மேலும், இந்த வீடியோவை கே.எல் ராகுலும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.



தற்போது, இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், கே.எல் ராகுல் தனது மனைவி அதியா ஷெட்டிக்கு ஸ்வீட் முத்தம் கொடுப்பதை காட்டுகிறது. பதிலுக்கு நடிகை அதியா ஷெட்டியும் தனது கணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement

Advertisement