• Apr 18 2024

முக்கிய இடத்தில் பெரும் சரிவை சந்தித்த வாரிசு.. இத்தனை கோடி நஷ்டமா.. புலம்பும் படக்குழு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட ஒருவர் என்றால் அது நடிகர் விஜய் தான். இவருக்குத் தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் ரசிகர்கள் உள்ளனர். வருடந்தோறும் இவரின் படங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளமோ ஏராளம். 


அந்தவகையில் இவரின் நடிப்பில் கடந்த வருடம் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் இப்படமானது எதிர்ப்பார்த்த அளவிற்குப் பெரியளவில் வரவேற்பினைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் விஜய் நடிப்பில் குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு திரைப்படம் வெளியாகி இருக்கின்றது.


இப்படமானது தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் வாரிக் குவித்து வரும் நிலையில் பல முக்கிய இடங்களில் வசூலில் சொதப்பியுள்ளது என்று தான் கூறவேண்டும். அந்தவகையில் மலையாளம், தெலுங்கு மற்றும் சில வெளிநாடுகளிலும் வாரிசு படத்தினுடைய வசூலானது குறைந்து படு தோல்வியை தழுவியுள்ளது.


இதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு முக்கிய இடத்திலும் வாரிசு படம் படு தோல்வி நிலையை சந்தித்துள்ளது. அதாவது UAE-யில் வாரிசு திரைப்படம் ரூ. 12.50 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாம்.

இதனால் இன்னும் ரூ. 4 கோடி வரை வசூல் வந்தால் மட்டுமே வாரிசு படம் லாபத்தை கொடுக்கும் எனக் கூறப்படுகின்றது.  இதன்முலம் UAE-யில் பெரும் நஷ்டத்தை வாரிசு திரைப்படம் எதிர்கொண்டுள்ளதாக படக்குழுவினர் சோகத்தில் உள்ளனராம்.

Advertisement

Advertisement

Advertisement