• Apr 28 2024

குட் நியூஸ் சொன்ன KGF பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி...! குவியும் வாழ்த்துக்கள்..! வைரல் பதிவு இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மிஸ் கர்நாடகா பட்டம் வென்ற இவர் யாஷ் நடித்த கே.ஜி.எப் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இந்த ஆண்டு வெளிவந்த  KGF Chapter 2 படத்தின் மூலம் இந்திய அளவில் அறியப்பட்ட நடிகையாக மாறினார்.

துளு நாட்டை சேர்ந்த நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி கடைசியாக சீயான் விக்ரமுடன் கோப்ரா படத்தில்  பாவனா மேனன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்தார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இந்த படம் கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 1200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

 நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கங்களில் கேஜிஎப் இரண்டாம் பாகம் வெளியாகி ஒரு வருடம் ஆவதையொட்டி படப்பிடிப்பு தள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்துள்ளார்.

அந்த பதிவில், " ஒரு வருடத்திற்கு முந்தைய இந்த நாளை திரும்பிப் பார்க்கையில்..

அன்றிலிருந்து நீங்கள் பொழியும் அனைத்து அன்புக்கும் என் இதயம் நன்றியுணர்வுடன் நிரம்புகிறது ♥️. KGF எனக்கு ஒரு உணர்ச்சி. எனது முதல் பெருமை. ஒவ்வொரு முறையும் நான் திரும்பிப் பார்க்கும்போதும், #KGF-ஐ நினைவுபடுத்தும்போதும், என் முகம் எப்போதும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் பிரகாசிக்கும்." என ஶ்ரீநிதி ஷெட்டி பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement