• May 09 2024

சகுந்தலம் பட சமந்தாவைப் போல மாறிய மாறிய இலக்கியா சீரியல் நடிகை- அடடே அவரைப் போலவே இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகை சமந்தா நடிப்பில் வெளியான உமன் சென்ட்ரிக் படங்கள் எல்லாமே ஹிட் அடித்து வந்த நிலையில், சகுந்தலம் திரைப்படம் சற்றே சறுக்கலை கொடுத்துள்ளதாக ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன. முன்னதாக வெளியான யசோதா திரைப்படம் 50 கோடி வரை வசூல் செய்து வேறலெவல் வெற்றியை சமந்தாவுக்கு பரிசளித்தது.


சமந்தாவின் சகுந்தலம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை என்றும் வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


கலர்ஸ் தமிழ் சீரியலான இதயத்தை திருடாதே தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் சின்னத்திரை நடிகை ஹிமா பிந்து திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சகுந்தலம் படத்தில் வரும் சமந்தாவை போல மேக்கப் போட்டுக் கொண்டு எடுத்த வீடியோவை வெளியிட்டு அந்த படத்திற்கான ப்ரோமோஷனை செய்திருக்கிறார். 

அப்படியே சமந்தா மாதிரியே இருக்கீங்க ஹிமா பிந்து என்றும் மேக்கப் மற்றும் கெட்டப் வேறலெவல் என ஹிமா பிந்துவின் ரசிகர்கள் அவரது இந்த முயற்சியை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதே சமயம் சமந்தா ரசிகர்கள் ஹிமா பிந்துவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


ஹிமா பிந்து சகுந்தலம் சமந்தாவாக மாறிய நிலையில், அவருக்கு லைக்குகள் மற்றும் பாராட்டுக்கள் குவிவதை போலவே ஹேட்டர்கள் ட்ரோல் செய்தும் வருகின்றனர். சமந்தா ரசிகர் ஒருவர், கருமம்.. சமந்தாவை அசிங்கப்படுத்தாதீங்க என்றும், இன்னொரு நெட்டிசன் பைத்தியக்காரி என்றும் கமெண்ட் போட்டு விளாசித் தள்ளி உள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement