• May 20 2024

கறுப்பு உடையில் கவர்ச்சிப் போட்டோக்களை பதிவிட்ட கீர்த்தி சுரேஷ்…மாளவிகா மோகனன் செய்த அந்தக் கமெண்ட்...என்ன தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா பின்புலத்தில் இருந்து வந்து இன்று தென்னிந்திய சினிமாவில் டாப் நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதாவது திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், தொழிலதிபர் எனப் பன்முகம் கொண்டு விளங்கி வருகின்ற சுரேஷ்குமார் என்பவரின் இளைய மகளே இவர். அதுமட்டுமல்லாது இவரது தாயாகிய மேனகா பிரபல தென்னிந்திய நடிகை ஆவார்.

இவர் 'இது என்ன மாயம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இன்றுவரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார். அத்தோடு ஒரு சில படங்களிற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதினையும் பெற்றிருக்கின்றார். அதுமட்டுமல்லாது இவர் நடிப்பில் தற்போது 'மாமன்னன்', 'தசரா', 'போலோ ஷங்கர்' உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

இவ்வாறாக திரையுலக அறிமுக காலத்தில் இருந்து இன்றுவரை பல படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வருகின்ற கீர்த்தி சுரேஷ் சோஷியல் மீடியாவிலும் அடிக்கடி எட்டிப்பார்த்து வருவது வழமை. அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி அதனை பதிவிட்டு வருவார். இந்த நிலையில் தற்போதும் இவர் ப்ளாக் அன்ட் வைற் உடையில் எடுத்த கவர்ச்சி நிறைந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப் பிரபலங்கள் பலரும் தமது கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

இந்தநிலையில் நடிகை மாளவிகா மோகனன் இட்ட கமெண்ட் பதிவு பற்றி ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர். அதாவது இவர் அந்த புகைப்படத்திற்கு "Oolalaaaa 🔥🔥🔥" எனப் பதிவிட்டிருக்கின்றார். அத்தோடு மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரனும் "🔥🔥🔥" எனக் கமெண்ட் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement