• Jun 17 2024

‘ஸ்டார்’ படத்திற்காக கவின் செய்த ஏமாற்று வேலை.. வெளிச்சம் போட்டு காட்டிய வீடியோ..!

Sivalingam / 3 weeks ago

Advertisement

Listen News!

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படம் முதலீட்டை விட அதிக அளவு வசூல் செய்துள்ளதால் தயாரிப்பாளரை பொருத்தவரை ஒரு சில கோடிகள் லாபம் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சியில் கவின் மொட்டை தலையுடன் இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக நிஜமாகவே அவர் மொட்டை அடித்தார் என்று அவர் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால் இயக்குனர் இளன் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் மொட்டை தலை காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
அதில் கவின் தலைமுடியை மறைத்து மொட்டை தலை போல் மாற்றி அமைத்த காட்சிகள் இடம் பெற்றுள்ளதை அடுத்து அவர் உண்மையாக மொட்டை அடிக்கவில்லை என்றும் மேக்கப் திறமையால் அவர் மொட்டைத்தலை போல் காட்சி அளித்தார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

இதனை அடுத்து கவின் இந்த படத்திற்காக மொட்டை போட்டு தியாகம் செய்தார் என்று வெளியான செய்திகள் பொய்யானது என்று தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கவின் ஏமாற்றிவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இருப்பினும் இந்த வீடியோவை பார்க்கும் போது மேக்கப்புக்காக பல மணி நேரம் பொறுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் கவின் நடித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement

Advertisement