• May 05 2024

ஹாஸ்பிட்டலுக்கு பணம் கட்ட முடியாமல் தவிக்கும் கண்ணன்- ஐஸ்வர்யாவைப் பார்த்து கேலி செய்து சிரித்த மீனாவின் அம்மா- கோபத்தில் முல்லை

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

ஐஸ்வர்யா டான்ஸ் ஆடும் போது எடுத்த வீடியோவை யூடியூப்பில் பார்க்கின்றார். இந்த வீடியோவை முதலில் பார்த்த மீனாவின் அம்மா சிரித்து விட்டு மீனா குடும்பத்தினருக்கு காட்ட அனைவரும் அந்த வீடியோவைப் பார்க்கின்றனர். அப்போது ஜனார்த்தனன் அவர்களின் சேட்டையைப் பார்து விட்டு திட்டிச் செல்ல மீனா ஜீவாவை சமாதானப்படுத்துகின்றார்.


தொடர்ந்து தனமும் முல்லையும் ஐஸ்வர்யா அனுப்பிய வீடியோவைப் பார்க்கின்றனர். முல்லைக்கு இந்த வீடியோவைப் பார்த்து கோபம் வர தனம் முல்லையை சமாதானப்படுத்துகின்றார். அத்தோடு நீ போய் அறிவுரை சொன்னால் அவள் கேட்பாளா ஏதாவது பண்ணிடடு போகட்டும் நீ சும்மா இரு என்று கூற முல்லையும் கோபத்தில் இருக்கின்றார்.


தொடர்ந்து ஐஸ்வர்யா வயிறு வலிக்கிறதே என்று இருக்கும் போது அவரது சித்தி வந்து என்ன என்று கேட்க டான்ஸ் ஆடும் போது கீழே விழுந்த விஷயத்தை சொல்ல அவர் கண்ணனுக்கு போன் பண்ணி ஐஸ்வர்யாவுக்கு வயிறு வலிக்கும் விஷயத்தைச் சொல்கின்றார். பின்னர் கண்ணன் பயந்து கொண்டு வந்து ஐஸ்வர்யாவை ஹாஸ்பிட்டலில் கொண்டு போய் சேர்க்கின்றார்.


ஹாஸ்பிட்டலில் மருந்து வாங்க காசு இல்லாததால் என்ன செய்தென தெரியாமல் ஐஸ்வர்யாவின் சித்தியிடம் கேட்க அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட கண்ணன் என்ன செய்வதென தெரியாமல் தவிக்கிறார். அத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement