• Jun 24 2024

தினவுள்ள தோள்கள் உண்டு.. தீயை கக்கும் வாட்கள் உண்டு.. அனிருத்தின் ‘இந்தியன் 2’ பாடல்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தது என்பதும் இந்த   பாடலின் முன்னோட்ட வீடியோவும் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 

இந்த நிலையில் இந்த பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வரும் நிலையில் இந்த பாடலை அட்டகாசமாக அனிருத் கம்போஸ் செய்துள்ளார் என்றும் அவர் இந்த பாடலை பாடி உள்ளார் என்பதும் தெரிய வருகிறது. 

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நடந்த கதையம்சம் கொண்ட இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வரியும் தாய் மண்ணே காக்கும் வீரம் தெரிகிறது என்றும் அனிருத் ஆக்ரோஷமாக பாடியுள்ளார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த பாடலின் சில வரிகள் இதோ:

பாரா.. வருவது ஓரத் படையா வீரா.. விழுப்புண் அலங்காரா

மாறா. ஆயிரம் உடைவாள் ஒருவன் பேரா.. வரிப்புலி வரலாறா?

தினவுள்ள தோள்கள் உண்டு தீயை காக்கும் வாட்கள் உண்டு

புரவிக்கு ரெக்கை உண்டு புயலுக்கும் தான் உருவம் உண்டு

தொட்டுப்பார் கை நடுங்கும் மூச்சடங்கும் இவனை கண்டு

வேட்டைக்கு போகுது பார் வேங்கை வெகுண்டு

என் தாய்மண் மேல் ஆணை இது தமிழ் மானத்தின் சேனை 

அட வெள்ளை ரத்தம் தொட்டு இனி வாளில் ஏற்று சாணை

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.




Advertisement

Advertisement