• Jun 16 2024

அல்லு அர்ஜுனின் புஷ்பா-2 வெளியாகிறது அடுத்த அப்டேட்.

Nithushan / 3 weeks ago

Advertisement

Listen News!

கடந்த 2021 ஆம் ஆண்டு  இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் புஷ்பா: தி ரைஸ்(பாகம் 1).பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றதுடன் 300 கோடிக்கு மேல் வசூலித்து பெருவெற்றி கண்டது.


இப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவர இருக்கும் புஷ்பா-2 திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருவதுடன் பெரும் எதிர்பார்ப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் முதல் பாடல் கடந்த மே முதலாம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.


படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வ  செய்தி இன்று வெளியாகி உள்ளது.இது குறித்த அறிவிப்பில் நாளை முற்பகல் 11.07 மணியளவில் பாடல் வெளியாகும் என்பதோடு ராஷ்மிகா மந்தண்ணா பாடலில் இடம்பெறுவதை குறிக்கும் விதமாக  ஸ்ரீவள்ளி எனும் விளிப்போடு போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.புஷ்பா-2  திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement