• Sep 29 2025

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படத்தின் டைட்டில்,டீசர் எப்போது தெரியுமா?வெளியான தகவல்!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தளபதியின் மகன் ஜேசன் சஞ்சய், தனது திரையுலக பயணத்தை இயக்குநராக ஆரம்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் இயக்கும் முதல் திரைப்படம் தற்போது முழு வேகத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில், இப்படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க தயாராகி வரும் இப்படத்திற்கு தமன் தான் இசையாமைத்துள்ளார். இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை மிக அதிகமாக தூண்டியுள்ளது. 

குறிப்பாக தளபதி விஜய்யின் மகனாக இருக்கும் ஜேசன் சஞ்சய், தனது முதல் படத்திலேயே இயக்குனராக களமிறங்குவது திரையுலகத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டிலும், டீசரும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின சிறப்பாக வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement