• Jan 15 2025

வைரலாகும் ஜப்பானியரின் தமிழ் பாடலுக்கான நடனங்கள் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

உலக அளவில் பேசப்படும் இந்திய சினிமாவிற்கு உலகம் மொத்தமும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.இதில் முக்கியமான நாடாக கருத்தில் கொள்ளப்படுகிறது ஜப்பான்.இவ்வாறிருக்க தமிழ் நடிகர்களின் விசிறிகளாக ஆயிரக்கணக்கான ஜப்பானியர்கள் வலம் வருகிறார்கள்.


சூப்பர் ஸ்டார் தொடக்கம் தளபதி விஜய் வரை பெருமளவில் ரசிகர்களை கொண்டிருக்கும் தமிழ் நடிகர்களுக்கும் ஜப்பானின் ரசிகர்கள் எண்ணிக்கை சேர்க்கப்பட வேண்டும்.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகிறது ஜப்பானிய குழுவொன்றின் புது முயற்சி.


ஜப்பானை சேர்ந்த இளைஞர் குழுவொன்று இந்திய திரைப்பாடல்களை மீள் உருவாக்கம் செய்து அந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.குறித்த விடீயோக்களில் தமிழ் பாடல்கள் அடங்கிய விடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement