• Sep 21 2024

அருண் விஜய் நடிக்கும் யானை டிரைலர் தேதி வெளியானது..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர் தான் அருண் விஜய். இவர் ஆரம்பத்தில் நடித்த பல திரைப்படங்கள் சுமாராக இருந்தாலும் இப்போது நடித்த வரும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

தன்னுடைய திறமையால் படிப்படியாக முன்னேறி இன்று பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவர் தற்பொழுது ஆறு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

அந்த வகையில் முதல் முறையாக அவருடைய அக்காவின் கணவர் ஹரி இயக்கும் யானை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு முன்னதாக சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஹரி. ஆனால் அந்த படம் ட்ராப் செய்யப்பட்ட நிலையில் அருண் விஜய்யோடு இணைந்தார்.

இந்நிலையில் யானை திரைப்படம் மே 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ரிலீஸ் தேதி ஜூன் 17க்கு மாற்றப்பட்டது.

இப்படத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர், ராதிகா, பிரகாஷ்ராஜ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. யானை படத்தை வருகிற ஜூன் மாதம் 17ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே படத்தில் டீசர் வெளியான நிலையில் இப்போது டிரைலரை மே 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement