• May 20 2024

'ஜெயிலர்' போஸ்டர் படைத்த சாதனை... டிசைன் செய்தது யார் தெரியுமா?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள 'ஜெயிலர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியான நிலையில், இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து இந்த போஸ்டர் ட்ரெண்டாகி வருகிறது. அத்தோடு  இந்த போஸ்டரை டிசைன் செய்த, டிசைனர் குறித்த தகவலும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். மேலும்  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிரூத் இசையமைக்கும் இந்த படத்திற்கு, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஜெயிலர் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று முதல் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளதை தெரிவிக்கும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.  

 இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தின் போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து ட்ரெண்ட் ஆகி உள்ளது.


இதனை ரஜினிகாந்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.அத்தோடு இந்த போஸ்டரை டிசைன் செய்த டிசைனர் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. சிவம் சி கபிலன் தான் இந்த படத்தின் போஸ்டரை வடிவமைத்துள்ளார். 

அத்தோடு இவர் ஏற்கனவே கோப்ரா, திருச்சிற்றம்பலம், நட்சத்திரம் நகர்கிறது, காட்பாதர், ஆர் ஆர் ஆர், விருமன், வாத்தி, வணங்கான், லைகர், பிரின்ஸ், வெந்து தணிந்தது காடு, ராதே ஷ்யாம், சாணிக் காயிதம் போன்ற படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்தவர் என்பது குறிபிடத்தக்கது.


Advertisement

Advertisement