• Apr 28 2024

அட்ராசக்க... விடாது பொழியும் 'ஜவான்' வசூல் மழை... கோடியில் புரளும் படக்குழு... 4நாட்களில் இவ்வளவா..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜவான். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகுமே சிறந்த வரவேற்பைக் கொடுத்துள்ளது.


குறிப்பாக ஷாருக்கானின் பதான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் ஜவான் படம் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் ஆவல் ரசிகர்களிடம் சற்று அதிகமாகவே இருந்தது. 


அதுமட்டுமல்லாது நயன்தாரா நடித்துள்ள முதல் பாலிவுட் திரைப்படம் இது என்பதால் நயன்தாரா ரசிகர்களும் அமோக வரவேற்புக் கொடுத்திருந்தனர். இந்நிலையில் ஜவான் படமானது சிறந்த வரவேற்பை மட்டுமல்லாது அமோக வசூலையும் வாரிக் குவித்து வருகின்றது.


அந்தவகையில் தற்போது ஜவான் படம் வெளிவந்து நான்கு நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த 4நாட்கள் முடிவில் ஜவான் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement