தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றாலே அது வடிவேலு தான் இருப்பினும் சமீபகாலங்களாக அவரது மவுஸ் குறைந்துள்ளது.அதிக படவாய்ப்புகள் இவருக்கு கிடைக்காமையினால் ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்.இந்நிலையில் தற்போது பிரபல நடிகரின் படத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள கார்த்தி 29 படத்தில் வடிவேல் நடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சர்தார் 2 சூட்டிங்கில் மிகவும் பிஸியாக நடித்து வருவதாகவும் இப் படம் முடிந்த கையுடன் அவர் இப் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.முதன் முறையாக கூட்டணி சேரவுள்ள வடிவேலு கார்த்தி ஜோடி எவ்வாறு அமையும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Listen News!