• Jan 19 2025

இது ஒரு தலைபட்சமான முடிவு- கமல்ஹாசனை மோசமாக விமர்சித்த சனம் ஷெட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சி தற்பொழுது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதோடு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.

இதனை அடுத்து இறுதியாக அன்னை பாரதி வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். அத்தோடு பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.


அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல போட்டியாளர்கள் புகார் சொன்ன நிலையில், கமல் வாக்கெடுப்பு நடந்தி ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றிவிட்டார்.இதனால் ரசிகர்கள் தமது ஆதரவை பிரதீப்புக்கு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி இந்த சர்ச்சை பற்றி விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். ரெட் கார்டு கொடுப்பதற்கு முன்பு வரை பல போட்டியாளர்கள் பிரதீப் உடன் டீலிங் பேசினார்கள், திட்டம் போட்டார்கள்.. ஆனால் அன்று மட்டும் அப்படி மாறிவிட்டார்கள்.ஒருதலைப்பட்சமான முடிவு என்றும் கமலை அவர் விமர்சித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement