• Dec 04 2023

கமல்ஹாசனின் 234 படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள்- பொன்னியின் செல்வன் படத்திற்கே டஃப் கொடுப்பார் போல இருக்கே

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணைந்துள்ளது. கமலின் 234வது படமாக இப்படத்திற்கு தக் லைஃப் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மிரட்டலான டீசருடன் வெளியான இந்த அப்டேட், கமல்ஹாசன் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது. 


நாயகன் படம் வெளியாகி 36 ஆண்டுகளுக்குப் பின்னர், கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.இந்த டீசரில், "என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன், நான் ஒரு கேங்ஸ்டர்" என செம்ம மிரட்டலாக மாஸ் காட்டியுள்ளர் கமல்ஹாசன்.


 ஏஆர் ரஹ்மானின் மிரட்டலான பிஜிஎம், மணிரத்னத்தின் மேக்கிங், அன்பறிவ் மாஸ்டர்ஸின் அட்டகாசமான ஆக்‌ஷன் ட்ரீட் என மஜாவாக உருவாகியுள்ளது Thug Life டீசர். இதன்மூலம் Thug Life கேங்ஸ்டர் மூவி என்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.


இந்த நிலையில் இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கவுள்ளாங்க என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் லீட் ரோலில் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement