கடந்த சில ஆண்டுகளுக்கு முதல் மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நஸ்ரியா. மலையாளத்தில் வெளியான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நஸ்ரியா தமிழ் சினிமாவிற்கு நேரம் மூலம் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நடித்தார்.மேலும் நய்யாண்டி,வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா என பல திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
இருப்பினும் படங்களில் நடிப்பதை விட்டு விட்டு பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்த நஸ்ரியா இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான டிரான்ஸ் படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பார்க்கும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நஸ்ரியா புகைபிடிப்பது மது அருந்துவது என வித்தியாசமான ரோலில் நடித்து அசத்தி இருந்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
இந்த நிலையில் இதுவரை தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த நஸ்ரியா முதன் முறையாக தெலுங்கில் நானியின் நடிப்பில் உருவாகியுள்ள அடடே சுந்தரா என்ற படத்தின் மூலம் அறிமுகி உள்ளார். இப்படம் தமிழ்,தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது
அடடே சுந்தரா படத்திற்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் நஸ்ரியா சமீபத்தில் தனியார் யூடியூப் நேர்காணலில் கணவர் பகத் பாசில் ஒரு படத்தில் எந்த கதாபாத்தில் நடிக்கிறாரோ அதேபோலத்தான் வீட்டில் அவரது நடவடிக்கைகளும் இருக்கும்.
அப்படித்தான் எங்களுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நேரத்தில் பெங்களூரு டேஷ் படத்தில் இணைந்து நடித்தபோது அந்தப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் என்னவோ அதே போல தான் நாங்கள் டேட்டிங் செய்யும் போதும் அவரது நடவடிக்கைகள் இருந்தது. அந்த அளவிற்கு நடிப்பில் மூழ்கிக் கிடப்பார் என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்
- மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த்-ஓ இது தான் காரணமா?
- கார்த்தியின் சர்தார் பட உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்
- சென்னை, முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்
- சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்
- தனது கணவரை அழகாக புகைப்படம் எடுத்த கார்த்தியின் மனைவி- ஷேர் செய்து வரும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!