• Sep 17 2024

’வலைப்பேச்சு’ பிஸ்மியை வச்சு செஞ்ச இயக்குனர் பாலா.. வீம்புக்கு கேட்ட கேள்வி..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் பாலாவிடம் வலைப்பேச்சு பிஸ்மி வீம்புக்கு கேள்வி கேட்டபோது அதற்கு பாலா கூறிய பதிலடி குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாலா என்பதும் அவரது படங்கள் மற்ற இயக்குனர்களின் படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்பதும் தெரிந்தது. மேலும் அவர் இயக்குனருக்கான தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ’பிசாசு’ என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட்டில் வலைப்பேச்சு பிஷ்மி, ‘பாலா போன்ற தரமான இயக்குனர்கள் கமர்சியல் பேய் படங்கள் எடுக்கலாமா’ என்ற கேள்வியை கேட்டார்.

அதற்கு பாலா ’உங்களை விடவா நான் கமர்சியல் திரைப்படம் எடுத்து விட்டேன், நீங்கள் தயாரித்த ஒரு படத்தை பார்த்தேன், அதில் நீங்கள் ஒரு கேரக்டரில் நடித்திருந்தீர்கள் அதையும் பார்த்தேன்’ என்று கூற பிஸ்மி மறு பேச்சு பேசாமல் வாயை பொத்திக் கொண்ட காட்சி அந்த வீடியோவில் உள்ளன.  

வலைப்பேச்சு பிஸ்மி ’தத்தி தாவுது மனசு’ என்ற படத்தை தயாரித்த நிலையில் அந்த படத்தில் மும்தாஜ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதில் பிஸ்மி ஒரு கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அவர் பேருந்தில் செல்லும் போது பெண்களை உரசும் ஒரு காட்சியும் இந்த வீடியோவில் வைரல் ஆகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ திடீரென ஏன் வைரலாகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.


Advertisement

Advertisement