• Apr 18 2024

கார்த்தியின் சர்தார் பட உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகுமாரின் மகன் என்றும் சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்தோடும் சினிமாவில நுழைந்தவர் தான் கார்த்தி. இவர் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவரது நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இதில் விருமன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகக் காத்திருக்கின்றது.

சர்தார் திரைப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் தமிழ் நாட்டில் வர்த்தக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement