• Jan 19 2025

திருமணத்திற்கு பிரேம்ஜி மனைவி கொடுத்த முத்தம் யாருக்கு? அதிர்ச்சி வீடியோ..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் பிரேம்ஜியின் மனைவி இந்து அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் திருமணத்திற்கு முன்பே அவர் ஃபிளையிங் கிஸ் கொடுத்த வீடியோவை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரேம்ஜி மற்றும் இந்து திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் தெரிந்தது.

திருமணத்திற்கு பின்னர் பிரேம்ஜி மற்றும் இந்து ஆகியோரின் ரொமான்ஸ் புகைப்படங்கள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் சற்று முன் இந்து தனது இன்ஸ்டால் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் திருமணத்திற்கு முன் ஜாலியாக தனது தோழிகளுடன் ஆட்டம் போட்ட காட்சி இருக்கும் நிலையில் திடீரென அவர் பிளையிங் கிஸ் கொடுக்கும் காட்சியும் உள்ளது.

ஆனால் திருமணத்திற்கு பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அமைதியாக குடும்பப் பெண் போல் நின்று கொண்டிருப்பது போலவும் அவரது அருகில் இருக்கும் அவரது தோழிகள் ஆட்டம் போட்ட காட்சியும் உள்ளன.

இதனை அடுத்து திருமணத்திற்கு முன் ஜாலியாக தோழிகள் உடன் ஆட்டம் போட்ட நிலையில் திருமணத்திற்கு பின் குடும்ப குத்து விளக்காக மாறிவிட்டதை அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கமெண்ட் பகுதியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement