• Aug 10 2026

கங்குவாவில் அந்த நடிகர் நடிப்பது உண்மை தான்.. பெரிய சஸ்பென்ஸை உடைத்த பாடலாசிரியர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் ஏராளமானவர்கள் நடிக்கின்றார்கள். படத்தின் ட்ரெய்லரும், பாடலும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

கங்குவா படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் இந்த படம், பலமொழிகளில் ரிலீசாக உள்ளது. இதன் காரணமாகவே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கங்குவா படத்தில் பணியாற்றி இருக்கும் பாடல் ஆசிரியர் விவேகா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் இந்த படத்தில் இருக்கும் பெரும் சஸ்பென்ஸை உடைத்து உள்ளாராம்.


அதாவது இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் கார்த்திக் நடிக்கின்றார். அவரது கேரக்டர் தான் இரண்டாவது பாகத்துக்கு லீட் கொடுக்கும்படி அமைந்திருக்கும் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் பாடலாசிரியர் விவேகா கூறுகையில், கங்குவா படத்தில் கார்த்திக் நடித்திருப்பது உண்மைதான் என்றுள்ளார். இதன் மூலம் கங்குவாவில் கார்த்திக் நடிப்பது உறுதியாக உள்ளது.

Advertisement

Advertisement