• May 21 2024

மிரட்டலாக வெளிவந்த 'சிங்க்' திரைப்படம்... திகில் கிளப்பியதா..? இல்லையா..? திரை விமர்சனம் இதோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் தற்போது இயக்கியுள்ள படம் தான் 'சிங்க்'. இப்படத்தில் 'முதல் நீ முடிவும் நீ' படத்தில் நடித்த கிஷன் தாஸ் நடிக்கிறார். அத்தோடு இவருடன் இணைந்து மோனிகா சின்னகோட்லா நாயகியாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாது சௌந்தர்யா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ் உட்பட பலரும் நடித்துள்ளனர். 

மேலும் இப்படத்திற்கு சிவராம் பி.கே. ஒளிப்பதிவு செய்வதோடு, அபிஜித் ராமசாமி இசையமைக்கிறார். இந்நிலையில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தின் உடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்களம் 

அந்தவகையில் இயக்குநராக முயற்சி செய்யும் நடிகர் கிஷன் தாஸ், ஒரு தயாரிப்பாளரை சந்தித்து விட்டு தோல்வியடைந்த முகத்தோடு வருகிறார். அவரை உற்சாகப்படுத்தும் வண்ணம் காதலியான மோனிகா சின்னகோட்லா பாண்டிச்சேரிக்கு ட்ரிப் போகலாம் எனக் கூறுகின்றார். 

பின்னர் சௌந்தர்யா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ் ஆகியோருடன் இணைந்து ட்ரிப் போகின்றனர். இந்நிலையில் மோனிகாவை பிராங்க் செய்யலாம் என மற்ற 3 பேரும் முடிவெடுக்கின்றனர். அவ்வாறு  அவர்கள் செய்யும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படுகிறது. குறித்த இந்த சம்பவத்தை காவல்துறையினரை கொண்டு மூடி மறைக்கின்றனர். 

பின்னர் இதுகுறித்து அவர்கள் 4 பேரும் வீடியோ காலில் இணைந்து பேசும் போது, அனைவரது வீட்டிலும் அமானுஷ்ய சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் என்ன? இந்த பிரச்சினையில் இருந்து அவர்கள் அனைவரும் மீண்டார்களா? போன்ற கேள்விகளுக்கு விடையாக இப்படத்தினுடைய மீதிக் கதை அமைந்துள்ளது.

நடிகர்களின் நடிப்பு எப்படி? 

அந்தவகையில் இப்படத்தினுடைய கதை முழுவதுமே கிஷன் தாஸ்,  மோனிகா சின்னகோட்லா, சௌந்தர்யா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ்  ஆகிய 4 பேரை மையமாக கொண்டு நகர்கின்றது. இவர்கள் அனைவருமே அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இருப்பினும் சௌந்தர்யா நந்தகுமார் தான் இந்தப் படத்தின் கதையில் ஒரு திகில் உணர்வை ஏற்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


படம் எப்படி? 

இப்படமானது மொத்தமே ஒன்றரை மணி நேரத்தை மட்டும் கொண்டுள்ளது. 

விறுவிறு திரைக்கதை மூலம் இயக்குநர் விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

படம் முழுவதும் அதிக நேரம் 4 பேரும் பேசிக் கொள்ளும் காட்சிகள் தான் இடம் பெற்றிருப்பது சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும் அதனை திகில் காட்சிகளை கொண்டு சரி செய்ய முயற்சித்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் வாயிலாக நண்பர்கள் குழுவின் நிகழ்வுகளை அழகாக நம் கண் முன் கொண்டு வந்துள்ளார்கள். 

தொகுப்பு 

மொத்தத்தில் இப்படமானது காமெடி எதுவும் இல்லாமல் முழுக்க த்ரில்லர் கதைக்களத்துடன் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement