• Jan 26 2026

ஜனநாயகனுக்கு வந்த புதிய நெருக்கடி... ரசிகர்கள் இன்னும் காத்திருக்க வேண்டும் போலயே.!

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான சென்சார் சிக்கல், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் விவாதங்களுடன் நடைபெற்று வருகிறது. விஜயின் கடைசி திரைப்படம் என கூறப்படும் இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே பல சட்ட சிக்கல்களை சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், அமேசான் நிறுவனம் ஜனநாயகன் படக்குழுவிற்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் முக்கியமான வாதத்தை முன்வைத்துள்ளார். இந்த தகவல் தற்போது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், தயாரிப்பு நிறுவனம் மற்றும் மத்திய திரைப்பட தணிக்கை குழு (CBFC) ஆகிய இரு தரப்புகளும் தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

விசாரணை நடைபெறும் போது, படத்தின் ரிலீஸ் தாமதம் காரணமாக தயாரிப்பு தரப்பு எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விரிவாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.


இந்த விசாரணையின் போது, தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், OTT உரிமம் தொடர்பாக அமேசான் நிறுவனம் கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

‘ஜனநாயகன்’ படம் ஏற்கனவே 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால், படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக,விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் OTT ஒப்பந்தங்கள் என பல்வேறு தரப்புகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement