• Jan 15 2025

மொத்த சந்தோஷத்தையும் கெடுத்துடீங்களே ஈஸ்வரி! எழில் எடுத்த முடிவு

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி எழிலை திட்டிக் கொண்டிருக்க எல்லாத்துக்கும் காரணம் அமிர்தா  தான் என அவர் மீதும் பழியை போட்டு பேசுகிறார்.

இதனால் பொறுமை இழந்த பாக்கியா எழிலை வீட்டை விட்டுப் போகுமாறு சொல்கின்றார். ஆனாலும் அதற்குப் பிறகு ஈஸ்வரி மீண்டும் எழிலுடன் வாக்குவாதப்பட, பாக்கியா உனக்கு சொன்னது புரியலையா வீட்டை விட்டுப் போ என எழிலுக்கு சொல்லிவிட்டு செல்கின்றார்.

அதன் பின்பு ஈஸ்வரியை ராமமூர்த்தி ரூமுக்குள் அழைத்துச் சென்று கதவை சாத்த, தான் சொன்னதில் என்ன பிழை இருக்கு ஒருநாள் கணேஷ் வந்து நிப்பான். அவர்களுக்கு ஒரு பிள்ளை இருந்தால்தான் அவர்களுக்கு பலமாய் இருக்கும் என்று ஈஸ்வரி பேசுகின்றார். ஆனாலும் எழில் வீட்டை விட்டு போக மாட்டான் தானே எனவும் வருந்துகின்றார்.

ரூமுக்கு சென்ற எழில் அம்மா சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று சொல்லி உடுப்புகளை பெட்டியில் அடுக்குகின்றார். அமிர்தா கோபத்தில் எதுவும் செய்ய வேண்டாம் என்று கெஞ்சவும் எழில் வீட்டை விட்டுப் போவதில் உறுதியாக இருக்கின்றார்.


மறுபக்கம் பாக்யாவிடம் செழியன், இனியா, ஜெனி ஆகியோர் எழில் வீட்டை விட்டு கிளம்புகின்றான் வந்து பேசுமாறு சொல்லவும், அவன் வீட்டை விட்டு போவது தான் சரியா இருக்கும் என பாக்கியா  தனது முடிவில் உறுதியாக இருக்கின்றார்.

இறுதியில் நிலா பாப்பா வர, இனியா அவரை தூக்கிக் கொள்கின்றார். இதன் போது தாம் ஊருக்கு போவதாகவும் உடுப்பு எல்லாம் எடுத்து வைத்து விட்டதாகவும் சொல்ல, இனியாவும் அழுது கொண்டே எழிலிடம் போய் பேசுகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement