• Jan 15 2025

மாமியாருக்கு பாக்கியா கொடுத்த தடபுடல் விருந்து.. கைமாறாக ஈஸ்வரி செய்த காரியம்? செருப்படி வாங்கிய கோபி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரிக்காக பாக்கியா தடபுடலாக விருந்து வைக்க, அந்த இடத்திற்கு கோபி வருகிறார். அவர்கள் சாப்பிடும் முன்பே தான் அம்மாவிடம் பேச வேண்டும் என பிரச்சனை செய்கிறார். இதனால் எழிலும்  ராமமூர்த்தியும் அவரை வெளியே போகுமாறு திட்டுகின்றார்கள்.

தான் அம்மாவிடம் பேசிவிட்டு போவதாக பிடிவாதம் பிடிக்க பாக்கியா எழிலை தடுக்கிறார். இதனால் ஈஸ்வரியிடம் போன கோபி தன்னை மன்னிக்குமாறும், நான் உங்களை நம்பி இருக்கணும் என்று நடந்தவற்றை சொல்லி புலம்புகின்றார்.

ஒரு கட்டத்தில் கோவப்பட்ட ஈஸ்வரி, ஹாலுக்கு வந்து நீ எதுக்கு இங்க வந்த? உன்னால பட்டது போதும். உங்க மாமி கம்ப்ளைன்ட் கொடுக்கும் போது உனக்கு தெரியலையா நான் உன் அம்மா என்று, என்னை நடுத்தெருவில துரத்தும் போது உனக்கு தெரியலையா நான் அம்மா என்று என கோபியிடம் சரமரியாக கேள்வி கேட்கின்றார்.

இதனால் பதில் சொல்ல முடியாமல் கோபி நிற்க, நீ எனக்கு பிள்ளையே இல்லை. இனி எனக்கு ஒரே ஒரு மகள் தான் அது பாக்கியா மட்டும்தான். அவள் ஒரு அயோக்கியன கல்யாணம் பண்ணினாள். இப்ப அவன் விட்டுட்டு போயிட்டான். நான் பாக்யா கூட எப்பவுமே இருப்பன். எனக்கு மகள் பாக்கியா மட்டும்தான். நீ என் வயிற்றிலேயே பிறக்கவில்லை என்று சொல்லி கோபியை தலை முழுகிறார்.


இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபி, எதுவும் பேச முடியாமல் நிற்க, இனி நான் செத்தா கூட நீ என் பிணத்தை பார்க்க வரக்கூடாது என்று சொன்னதோடு, வீட்டார்களுக்கும் என் மேல் அன்பு இருந்தா இவனை என் பிணத்தை கூட பார்க்க விடக்கூடாது என்று சொல்கிறார்.

இறுதியில் கோபி வாசலில் போய் இருந்து அழுகின்றார். இதுக்கெல்லாம் காரணம் கமலா தானே என வீட்டுக்கு வந்து கதவைத் தட்ட, ராதிகா கமலாவை கதவை திறக்க சொல்லுகிறார். மேலும் அவர் கேட்கிற கேள்விக்கு நீயே பதில் சொல்லு என சொல்ல, எனக்கு பயமா இருக்கு நீயே போய் கதவ தொற என்று கமலா எஸ்கேப் ஆகிறார்.

இதைத்தொடர்ந்து ராதிகா கதவை திறக்க, மயூ காதை பொத்திக்  கொண்டு இருக்கின்றார். ஆனால் கோபி சோபாவில் வந்திருந்து அழுகின்றார். இதை பார்த்த ராதிகா அம்மா சொன்னத நம்பி நானும் செய்தேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று கேட்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement