• Sep 21 2024

விஜய் 66ல் ராஷ்மிகா நடிக்கும் கதாபாத்திரம் இது தானா..? வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய். இவர் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். அத்தோடு இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகின்றார்.

இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவருடன் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இன்னும் பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

சிறு வயதிலிருந்தே விஜய்யின் ரசிகையாக இருக்கும் ராஷ்மிகா நடிக்க வந்தது முதலே விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டுமென்ற ஆசையில் இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அப்பேட்டியில் விஜய் 66 படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றிய தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளார். மேலும் இப் படத்தில் சுயநலமிக்க, தலைக்கனம் பிடித்த பெண்ணாக ராஷ்மிகா நடிக்கிறாராம். அக்கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலான ஒன்றாக இருப்பதாக ராஷ்மிகா கூறியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகளின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில வெளியாகி உள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். படப்பிடிப்பின் போது கட்டுப்பாடுகள் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement