• Sep 21 2024

நம்ம சிறகடிக்க ஆசை நாயகி மீனாவா இது? சும்மா கிறங்கடிக்க வைக்கிறாளே..! ரசிகர்கள் புகழாரம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை சீரியல். இதில் நாயகியாக நடிக்கும் நடிகை கோமதி பிரியா அண்மையில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் டிவியின் 'வேலைக்காரன்' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை தான் கோமதி ப்ரியா. இதில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

மதுரையை சேர்ந்த இவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, கொஞ்ச நாள் வேலை செய்துள்ளார். அதன் பின் நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் ஒரு ரியாலிட்டி ஷோவில் கெஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.


அத்துடன் இவர் தெலுங்கிலும் 'ஹிட்லர் கேரி பெல்லம்' என்ற தொடரிலும் நடித்தார். அதன்பின் வேலைக்காரன் சீரியல் முடிவடையவே, விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது  நடித்து வருகிறார்.

இவ்வாறு தனது நடிப்புத் துறையில் ரொம்ப பிசியாக இருக்கும் மீனா, அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக காணப்படுகிறார். இந்த தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அதன்படி, 'பேஷன் என்பது சாப்பாடு போன்றது எப்போதும் ஒரு மெனுவில் இருக்க கூடாது' என்ற கேப்ஷனுடன் கோமதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement