• Apr 26 2024

'சிங்கம் 3' படத்தில் இணையும் முக்கிய நடிகர்…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்பவர் நடிகர் அஜய் தேவ்கன். இவர் 1990-ஆம் ஆண்டிலிருந்து ஹிந்தி திரையுலகில் பிரகாசித்து வருகின்றார்.மேலும் 19 97- ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'பூல் ஆர் காந்தே' என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்னர் இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகியுள்ளன. தனது நடிப்புத் திறமை மூலம் சினிமாவில் நீடித்து நிலைத்திருக்கும் இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாது தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் எனப் பன்முகப்பட்ட திறமைகளை கொண்ட இவரது தயாரிப்பில் தற்போதுஉருவாகியுள்ள படம் 'போலா'. இப்படம் இவரது தயாரிப்பில் வெளியாகும் நான்காவது படமாகும். தானே தயாரித்து நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை தபு நடித்துள்ளார். 'போலா' படப்பிடிப்புகளில் இவர் பிஸியாக இருந்தாலும் ரோகித் ஷெட்டியுடன் இணைவதற்குத் தயாராக உள்ளார்.

அதாவது ஹிந்தியில் உருவாகும் 'சிங்கம்-3' திரைப்படத்தில் ரோகித் ஷெட்டி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். சிங்கம் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்புகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இருப்பினும் இப்படம் 2023 இல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இவர் "ரோஹித் ஷெட்டியின் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும்" என்று உறுதிப்படுத்தினார். ரன்வீர் சிங் நடிக்கும் 'சர்க்கஸ்' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் ரோஹித் ஷெட்டி பிஸியாக இருப்பதால் இம் மூன்றாவது பாகத்துக்கான தயாரிப்பு அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளது எனவும், மேலும் இப்படம் இன்றுவரை அவர்கள் உருவாக்கிய மிகப்பெரிய போலீஸ் பிரபஞ்சமாக இருக்கும் என்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கருதுகின்றனர்.

இதற்கிடையில் ரோஹித் ஷெட்டி தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா, ஷில்பா ஷெட்டி மற்றும் விவேக் ஓபராய் நடிக்கும் 'இந்திய போலீஸ் படை' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். எனினும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் 'சர்க்கஸ்' டிசம்பர் 23 அன்று வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர். போலா படப்பிடிப்புக்களைத் தொடர்ந்து அஜய்தேவ்கான் அவர்கள் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் 'நன்றி கடவுள்' என்ற திரைப்படத்தில் இணைவார் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement