• Apr 18 2024

அதில் எவ்வித உண்மையும் இல்லை…என் படத்தைப் புறக்கணிக்காதீர்கள்…ரசிகர்களிடம் கெஞ்சிய பிரபல நடிகர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழ்பவர் நடிகர் அமீர்கான். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகப்பட்ட திறமைகளை கொண்ட இவர் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் 'அமீர்கான் புரொடக்க்ஷன் நிறுவனம்' என்ற நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் 1984 இல் வெளியான 'ஹோலி' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். திரையுலகில் தனது திறமையை நிலைநாட்டிய இவருக்குப் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

'பாரஸ்ட் கம்ப்' என்ற திரைப்படம் 1994-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாகும். 25 ஆண்டுகள் கழித்து இப்படத்தினை நடிகர் அமீர் கான் 'சட்டா' என்னும் பெயரில் ரீமேக் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் அமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங், ஆரிய சர்மா மற்றும் மான விஜி போன்றவர்கள் நடித்துள்ளனர்.

படப்பிடிப்புகள் முடிந்த பின்னர் இப்படத்தினை ரிலீஸ் செய்வதற்கு பல முயற்சிகள் எடுத்தபோதும் பல காரணங்களினால் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தினை எதிர்வரும் ஆகஸ்ட் 11-ஆம் திகதி ரிலீஸ் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இப்படத்தை ரிலீஸ் செய்வதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் திரைப்படத்தினை தமிழில் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' தயாரிக்கின்றது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமீர்கான் "இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது" என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதனால் அவர் தேசபக்தி அற்றவர் எனக் கூறி புறக்கணிக்கப்பட்டார்.

தற்போது "லால்சிங் சத்தா படத்தைப் புறக்கணிப்போம்" என சிலர் ஹேஷ்டேக் உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். இதுபற்றி பேசியுள்ள அமீர்கான் "நான் நமது நாட்டை நேசிக்கவில்லை என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை. என் படத்தை புறக்கணிக்காமல் அனைவரும் பாருங்கள்" எனக் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement