• Jan 15 2025

சிறகடிக்க ஆசை கோமதியாக இது..? பார்க்கவே ரொம்ப சின்ன புள்ளைய இருங்காங்களே! வைரல் போட்டோ

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகியாக உலா வருபவர் தான் நடிகை கோமதிப்பிரியா. இவர் ஆரம்பத்தில் ஒளிபரப்பான வேலைக்காரன் என்ற சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளிலும் நாயகியாக களமிறங்கி அதிலும் வெற்றி கண்டுள்ளார். இவருக்கு என்றே தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுவதோடு பேன்ஸ் பேஜும் எக்கச்சக்கமாக காணப்படுகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில் இவருடைய நல்ல குணமும், அப்பாவித்தனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அத்துடன் விஜயா கேரக்டரில் நடிக்கும் நடிகை அனிலாவை வெளியில் பார்த்த ரசிகர்கள் மீனாவை ஏன் இப்படி கொடுமை படுத்துறீங்க என கேட்டதாகவும் பேட்டியொன்றில் தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில், சமீபத்தில் இடம்பெற்ற விஜய் டிவி அவோர்ட்ஸில் நடிகை கோமதிப்பிரியாவுக்கு எதிர்பாராத சப்ரைஸ் கிடைத்துள்ளது.

அதாவது, ஆரம்பத்தில் விஜய் டிவியில் சாதாரண ஆடியன்ஸாக இருந்த கோமதிப்பிரியா தனது விடாமுயற்சி காரணமாக படிப்படியாக முன்னுக்கு  வந்த குறும்படம் ஒன்றை போட்டுக் காட்டி அவரை உற்சாகப்படுத்தி உள்ளனர்.

இதை பார்த்த ரசிகர்கள் கோமதிப்பிரியா இன்னும் இன்னும் வாழ்க்கையில் உயர் வேண்டும் என தமது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement