• Sep 21 2024

ரஜனி வீட்டில் அடுத்த ஹீரோ ரெடியா..? வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் ரஜனி காந்த்.இவருக்கு இரண்டு மகள்களும் உள்ளார்கள்.

இவ்வாறு இருக்கையில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உண்டு. தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி தங்களின் பிரிவை சமூக வலைதளங்களில் அறிவித்தார்கள்.

இது ரசிகர்களிடத்தே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.அதாவது 18வருடம் இல்லற வாழக்ககையில் ஈடுபட்டு இரண்டு புதல்வர்களை பெற்று எடுத்த இருவரும் ஏன் பிரிகிறார்கள் என்ற கேள்வியே.தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழும் நிலையில் தத்தமது வேலையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் தான் தி கிரே மேன். அமரிக்க படமான இத்திரைப்படம் வரும் ஜுலை மாதம் 15 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தை பிரமாண்ட பொருட் செலவில் நெட்ஃபிளிக்ஸ் தயாரித்துள்ளது.

இவ்வாறு இருக்கையில் இப்படத்தில் premiere show இல் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் அழகாக கோட்சூட் அணிந்து கொண்டு கலந்து கொண்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடத்தே வைரலாகி வரும் நிலையில் தற்போது ரசிகர்கள் ரஜனியின் பேரனான யாத்ராவை பார்த்து அடுத்த ஹீரோ ரெடி போல என கேட்டுள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement