• May 19 2024

சூர்யாவுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை-அட இவரா..வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருகின்றார் நடிகர் சூர்யா.

இவர் நடிப்பில் அண்மை காலங்களில் வெளியாகிய சூரரை போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் பெரும் வெற்றியை குவித்து வருகின்றது.

இவர் தற்போது வணங்கான் படத்தின் பிசியாக இருக்கிறார். பாலா இயக்கும் அந்த படத்தின் முதல் schedule ஷூட்டிங் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

எனினும் இதனை தொடர்ந்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில் தற்போது சூர்யா ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

அத்தோடு ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் நடித்து பாப்புலராக இருக்கும் மஹிரா ஷர்மா என்ற நடிகை தான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement