• Apr 28 2024

வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டது உண்மை தானா?- வெளியாகிய வீடியோ-இது தான் காரணமா.?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் அறியப்பட்டவர் வெங்கட் பிரபு. இசையமைப்பாளர் இளைய ராஜாவின் சகோதரர், கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு. தன்னுடைய குடும்பமே இசை குடும்பமாக இருந்தாலும், தன்னுடைய தந்தையை தொடர்ந்து, இயக்குநராக வெள்ளித்திரையில் அவதாரம் எடுத்தார். 

இவரின் மிகப்பெரிய பிளஸ் என்றால், தற்போதைய இளைஞர்களுக்கு ஏற்ற போல் மிகவும் கேஷுவலான கதையை இயக்கி ஹிட் கொடுப்பது தான். இவர் தற்பொழுது தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில்,  நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.


 இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . இதில் நாக சைதன்யாவின் அசுரத்தனமான கதாபாத்திர அவதாரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க, ப்ரியாமணி வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார், சம்பத்ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் மற்றும் பலர் நடிக்கின்றனர்.  அக்கினேனி இதுவரை கதாநாயகனாக நடித்தப் படங்களிலேயே ‘கஸ்டடி’ அதிக பொருட்ச்செலவில் உருவாகி வரும் படம். 


இந்த ஆண்டு மே 12, ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் வித்தியாசமான ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு,  ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் 10.4.2023 அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இந்த வித்தியாசமான புரோமோஷன் வீடியோ, சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது

Advertisement

Advertisement

Advertisement