• Apr 27 2024

விஜய்யின் கெரியரில் இந்தப் படம் தான் முதன்முறையாக இப்படி உருவாகின்றதா?- வாவ்... வேற லெவல் அப்டேட்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தற்பொழுது இந்திய அளவில் கவணிக்கப்படும் இயக்குநராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ்.இவர் நடிகர் விஜய்யை வைத்து லியோ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.இப்படம் குறித்த அப்டேட்டுக்கள் அடிக்கடி வெளியாவதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

 விக்ரம் படம் போலவே இந்தப் படத்திற்கான டைட்டிலையும் ப்ரோமோவுடன் வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.பான் இந்தியா படமாக உருவாகும் லியோவில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மாத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சென்றது படக்குழு. அங்கு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவந்தது. கிட்டத்தட்ட் 2 மாதங்கள் அங்கு முகாமிட்டிருந்த படக்குழு கடந்த வாரத்தில்தான் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியது. தற்போது லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் சென்னையில் முடிக்கவே படக்குழு திட்டமிட்டும் இருக்கிறது.

 இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி லியோ படம் குறித்து தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அவர் தனது யூட்யூப் சேனலில் பேசுகையில், 'லியோ' படம் அதிக பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. அதாவது 350 கோடியிலிருந்து 375 கோடி பட்ஜெட்டில் 'லியோ' படம் தயாராகிறது. விஜய்யின் கேரியரில் இப்படி அதிக பட்ஜெட்டில் படம் உருவாவது இதுவே முதல்முறை. ஏறக்குறைய காஷ்மீர் ஷெட்யூலுக்காக அதிக செலவு செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.


இதற்கிடையே லியோ படத்தின் வியாபாரம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகின. சில வாரங்களுக்கு முன்பு லியோ படத்தை டப்பிங் செய்து ஓடிடியில் வெளியிடும் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 76 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. அதேபோல், லியோ படத்தின் வெளிநாட்டு உரிமை 60 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement