இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளான ஒரு படமாக கங்குவா திரைப்படம் காணப்பட்டது. இந்த படம் வரலாற்று கதை அம்சம் நிறைந்த கதையாக காணப்பட்டதோடு இதில் சூர்யா மாறுபட்ட கேரக்டரில் நடிக்கின்றார் என்பதை அறிந்ததும் மிகப்பெரிய கனவு கோட்டையை கட்டினார்கள் ரசிகர்கள்.
அது மட்டுமின்றி இந்த படத்துக்கு ப்ரமோஷன் பண்ணிய படக் குழுவினர் 2000 கோடி வசூலிக்கும், வாயை பிளந்து படத்தை பார்ப்பிர்கள் என்று எக்கச்சக்கமாக அளந்து விட்டார்கள். இதையெல்லாம் கேட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தியேட்டர் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இதன் காரணத்தினால் கங்குவா படத்தை நாரடித்தார்கள். இந்த படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாகவும் இதன் முன் பக்க காட்சியில் சம்பந்தமே இல்லாமல் இருப்பதாகவும் பல குறைபாடுகள் அடுக்கடுக்காக சொல்லப்பட்டது.
d_i_a
இதை தொடர்ந்து படக் குழுவினர் கங்குவா படத்தின் முதல் காட்சியில் இருந்து 12 நிமிடங்களை கட் பண்ணியதோடு சத்தத்தையும் குறைக்குமாறு அனைத்து தியேட்டர்களுக்கும் அறிவுறுத்தல் விட்டார்கள். அதன் பின்பு ஜோதிகாவும் கங்குவா படத்தின் நெகட்டிவ் கமெண்ட்ஸ் தொடர்பில் அறிக்கையை வெளியிட்டார்.
இந்த நிலையில், கடந்த வாரம் வெளியான படங்களும் இந்த வாரம் வெளியான ஒன்பது படங்களும் ரசிகர்கள் மத்தியில் சென்றடையவில்லை முதல் சோவிலையே காலியாகி விட்டது என அந்தப் படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் சூர்யா குடும்பத்திற்கு எதிராகவும் திருப்பூர் சுப்ரமணியத்திற்கு எதிராகவும் கொந்தளித்துள்ளார்கள்.
அதாவது கங்குவா படத்திற்கு எழுந்த விமர்சனத்தின் காரணமாக இனிமேல் தியேட்டர் வாசல்களில் எந்த ஒரு youtube சேனலும் நிற்க கூடாது என்றும் ரசிகர்களை பேட்டி எடுக்கக் கூடாது என்றும் கடினமாக கட்டுப்பாட்டுகளை விதித்தனர். இதன் காரணத்தினால் சிறிய பட்ஜெட்டில் வெளியான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் சென்றடையவில்லை.
தியேட்டர்களில் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் நல்லா இருக்கு என்று சொன்னால் அந்த மவுத் டாக் மூலமாக நல்ல படங்கள் வசூலில் வேட்டை நடத்தியும் காட்டி உள்ளன. ஆனால் இப்போது அதற்கு தடை விதிக்கப்பட்டதால் இது தயாரிப்பாளர்களையும் தியேட்டர் ஓனர்களையும் பாதிக்க செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
Listen News!