• Jul 21 2026

லவ் சொல்ல கஷ்டமா? யாரை கேட்கிறார் பிரியங்கா நல்காரி..? கியூட் வீடியோ இதோ..

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமாக நடித்து வந்தவர் தான் பிரியங்கா நல்காரி. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா  சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் காணப்பட்டது. இந்த சீரியலில்  ஹீரோயினாக நடித்தவர் தான் பிரியங்கா. இந்த சீரியல் அவருக்கு ஒரு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதா ராம் என்ற சீரியலிலும் நாயகியாக நடித்தார். எனினும் அந்த சீரியலில் இருந்து ஒரு சில காரணங்களினால் விலகி இருந்தார்.

அதற்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான நள தமயந்தி சீரியலிலும் நடித்து வந்தார். அந்த சீரியலிலும் இவரது கேரக்டர் திடீரென உயிரிழந்ததாக ஒளிபரப்பாக, பிரியங்கா தான் இதிலிருந்து விலகி விட்டார் என மாறுபட்ட கருத்துக்கள் உலா வந்தன.


எனினும் தற்போது தனது கணவருடன் மலேசியாவில் ரெஸ்டாரன்ட் ஒன்றை ஆரம்பித்து அதை சிறப்பாக கொண்டு நடத்தி வருகின்றார் நடிகை பிரியங்கா நல்காரி.

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்காரி, ரில்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டு உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். இதோ அந்த வீடியோ, 


Advertisement

Advertisement